சினிமா செய்திகள்
’மிஸ் இந்தியா’ கீர்த்தி சுரேஷ்

நடிகையர் திலகம் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டுக்களும் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்களில் காணாமல் போய்விட்டன.
இதனால், பாலிவுட்டுக்கு சென்று மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க வேண்டும் என உடல் எடையை மிகவும் குறைத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
மேலும், இப்போதெல்லாம், சும்மா வந்து போகும் ஹீரோயின் கதாபாத்திரம் வந்தால், மறுத்து விடும் கீர்த்தி சுரேஷ், நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து வருகிறாராம்.
பாலிவுட் படத்திற்கு பிறகு, தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹீரோயினை மையப்படுத்திய இக்கதைக்கு மிஸ் இந்தியா என டைட்டில் வைத்துள்ளார்கள். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















