தமிழ்நாடு
3 லட்சம் கோடி பதுக்கியுள்ள அமைச்சர்: தங்க தமிழ்செல்வன் பகீர் தகவல்!

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் ஏற்பாட்டில் அமமுக கட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனியில் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன், ஜெயலலிதா இல்லாத அதிமுக ஊழல் ஆட்சியாக உள்ளது. 1500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 550 கோடி ரூபாயை செலவு செய்து அதிமுக ஒரு எம்பி பதவியை பெற்றுள்ளது என அதிரடியாக பேசிய அவர் மேலும் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
எனக்கு மட்டும் அதிகாரம் கொடுங்கள். அமைச்சர் ரூ.3 லட்சம் கோடி பதுக்கியுள்ளார். மற்றவர்கள் தலா ரூ.1 லட்சம் கோடி வரை பதுக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கு வைத்துள்ளனர் என எனக்கு தெரியும். அவற்றை வெளியே கொண்டு வருவேன் என பெரிய குண்டை தூக்கி போட்டார் தங்க தமிழ்செல்வன்.

















