உலகம்
சவுதி விமான நிலையத்தில் பயங்கர வான்வழி தாக்குதல்: உச்சக்கட்ட பரபரப்பில் சவுதி!

சவுதி அரேபியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இன்று பயங்கரமான வான் வழி தக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சவுதி அரேபியா ஏமன் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஹவுத்தி கிளர்ச்சி படைக்கு ஈரான் அரசு ஆதரவாக செயல்படுகிறது.
இந்நிலையில் சவுதி அரசை மிரட்டும் வகையில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படை இந்த வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சவுதி ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமான விமான நிலையத்தில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதால் சவுதியில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
















