இந்தியா
இரவுச் செய்திகள் – 17.11.2026

- தமிழ்நாட்டிலிருந்து கருங்கல், ஜல்லிக் கற்கள் போன்ற கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாட அரச விதித்த தடையை ரத்து செய்த்து சென்னை உயர்நீதிமன்றம்.
- விமான நிலையங்களில் CISF படையின் வீர்ர்களைக் குறைத்து ஆயுதப் பாதகாப்பு தேவை இல்லாத இடங்களில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை ஈடுபடுத்த முடிவ. விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு BCAS இதற்கான பரிந்துரைகளை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிப்பு.
- உயிர்காக்கும் மருந்துகளை சேமிக்கும் வேலையை செய்ய வேண்டிய TNMSC (தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்), தவெக ஆட்சியில் உற்சாக மதுபானங்களை சேமிக்கும் கிடங்குகளை சீரமைக்க டெண்டர் விடுத்துள்ளது குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் முன்னாள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. Ma Subramanian அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு தொடர்ந்து அதிக கடன் வாங்குவதால் அச்சம் அடைந்துள்ள அரசு அலுவலர்கள் விருப்ப ஓய்வு கேட்டு அதிக அளவில் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
- 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மேற்கு ஆசியப் போர் காரணமாக வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுச் சந்தைகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி பெற்றுள்ளது. ஓமன், மொரீஷியஸ் உள்ளிட்ட இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கொண்ட நாடுகளுக்கான ஏற்றுமதியும் சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
- பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மூத்த மகள், வரும் டிச.,6 ம் தேதி புதிய இயக்கத்தை துவங்கும் விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அண்ணா சீர் திட்டம் 5.10.2026 முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும் என்பதால், 5.10.2026 முதல் 15.01.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.01.2027 வரை விண்ணப்பிக்க சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





