Connect with us

இந்தியா

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

Published

on

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Annan Seer Thittam: அண்ணன் சீர் திட்டத்திற்கு 2026 அக்டோபர் 5 முதல் ஜனவரி 15 வரையிலான திருமணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் புதிய அண்ணன் சீர் திட்டம் தொடர்பாக சமூக நல இயக்குனருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள குடும்பங்கள், வருமான வரி செலுத்தும் குடும்பங்கள், தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. அதே போல சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள குடும்பங்கள், 10 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 25 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 3,600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து) அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் / ஓய்வூதியதாரர்கள், ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. அதோடு, பிற துறைகள் / வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேறு ஏதேனும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

மேலும், அண்ணா சீர் திட்டம் 5.10.2026 முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும் என்பதால், 5.10.2026 முதல் 15.01.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.01.2027 வரை விண்ணப்பிக்க சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது. திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்சம் சட்டபூர்வ வயதை நிறைவு செய்யாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பதாரர்கள் அரசு இ சேவை மையம் மூலமாகவோ அல்லது tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க திருமண சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை, முகவரி சான்று உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா47 seconds ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 17.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

சினிமா6 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா6 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

Uncategorized4 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

வணிகம்4 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 12.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

Translate »
operation maintenance..