இந்தியா
இரவுச் செய்திகள் – 16.11.2026

- ட்ரம்பையும் நெத்தன்யாகுவையும் கொல்லாமல் விடப்போவதில்லை – ஈரான் அதிரடி எச்சரிக்கை! ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் இலக்குகளா?
- டாலரைத் தவிர்க்க ரஷ்யாவின் புதிய நகர்வு! இந்திய ரூபாய்க்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்! அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்ய வங்கிகள் சர்வதேசப் பணப் பரிவர்த்தனைகளில் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இதற்குத் தீர்வாக வங்கதேசத்துடனான இருதரப்பு வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள ரஷ்யா முன்மொழிந்துள்ளது. இந்த முயற்சி நடைமுறைக்கு வந்தால், இந்திய ரூபாயின் சர்வதேசப் பயன்பாட்டுக்கு மற்றொரு வாய்ப்பு உருவாகலாம். ஏற்கெனவே இந்தியா – ரஷ்யா வர்த்தகத்திலும் ரூபாய் மற்றும் ரூபிள் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன
- ஐரோப்பாவிலும் அமெரிக்காவிற்கு பாதுகாப்பு இல்லை| ஓட்டமெடுக்கும் அமெரிக்க போர் விமானங்கள்
- ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகும் எந்தவொரு முஸ்லிம் நாட்டிற்கும் ஈரான் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
- வரலாறில் எப்போதாவது ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ஒரு அதிபயங்கர, அதே சமயம் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வல்லரசுகளின் சங்கமத்திற்கு’ உலகம் தயாராகிக்கொண்டிருக்கிறது! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூன்று வல்லரசுத் தலைவர்களும் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே மேசையில் அமர்ந்து பேசும் முத்தரப்பு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாடு வரும் நவம்பர் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) சீனாவின் தொழில்நுட்பத் தலைநகரான ஷென்சென்னில் நடைபெறவுள்ளது!





