Connect with us

இந்தியா

நிஜமாகும் பேரழிவு? வெறும் 60 நாட்களில் 8 கி.மீ. பனிப்பாறை காணாமல் போனது! அண்டார்டிகாவில் நிகழ்ந்த மின்னல் வேக சரிவு!

Published

on

பருவநிலை மாற்றத்தின் கோர முகம் அண்டார்டிகாவில் புதிய அதிரடியைக் காட்டியுள்ளது. அண்டார்டிகாவின் ‘ஹெக்டோரியா’ (Hektoria Glacier) பனிப்பாறை, இதுவரை அறிவியலாளர்கள் பார்த்திராத வேகத்தில் உருகி சரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெறும் 60 நாட்களில் இந்த பனிப்பாறை 8 கிலோமீட்டர் தூரத்திற்குப் பின்வாங்கியுள்ளது.
நியூயார்க்கின் புகழ்பெற்ற ‘மன்ஹாட்டன்’ தீவு அளவிற்கு (சுமார் 60 கி.மீ) இருந்த பிரம்மாண்ட பனிப்பகுதி உடைந்து சிதறி கடலில் கலந்துள்ளது. இதனை பார்த்த விஞ்ஞானிகள் “கற்பனைக்கும் எட்டாத வேகம்” என மலைத்துப் போயுள்ளனர்.
வழக்கமாக பனிப்பாறைகள் கரடுமுரடான தரைப்பகுதியில் இருப்பதால் மெதுவாகவே நகரும். ஆனால், ஹெக்டோரியா பனிப்பாறை ‘ஐஸ் பிளைன்’ (Ice plain) எனப்படும் மிகவும் சமமான தரைப்பரப்பின் மேல் அமைந்திருந்தது. பனிப்பாறையின் தடிமன் மெலிந்தவுடன், அந்த சமமான தரையில் இருந்த பிடிமானம் (Friction) தளர்ந்தது.
தரைக்கும் பனிக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டவுடன், வெப்பமான கடல்நீர் அடியில் புகுந்து பனிப்பாறையை அப்படியே மேலே தூக்கியது. இதனால் ‘செயின் ரியாக்ஷன்’ ஏற்பட்டு, பனிப்பாறை சீட்டுக்கட்டு போலச் சரிந்து கடலில் கலக்கத் தொடங்கியது.
இந்தத் திடீர் சரிவு இன்று நேற்று தொடங்கியதல்ல. 2002-ல் ‘லார்சன் பி’ என்ற பனி அடுக்கு உடைந்தபோதே இதற்கான அடித்தளம் போடப்பட்டு விட்டது. கடந்த 20 ஆண்டுகளாகப் பாதுகாப்பாக இருந்த அந்த அடுக்குகள் இல்லாததால், ஹெக்டோரியா பனிப்பாறை மெல்ல மெல்லத் தன் வலிமையை இழந்து வந்தது. 2022 முதல் 2026 வரையிலான ஆய்வில் இது மொத்தம் 25 கி.மீ தூரம் பின்வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெக்டோரியா பனிப்பாறை அளவில் சிறியதுதான் என்றாலும், இது உலகையே அச்சுறுத்தும் ‘தவைட்ஸ்’ (Thwaites Glacier) போன்ற ‘டூம்ஸ்டே’ (Doomsday) பனிப்பாறைகளுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Translate »
Ekologia w produkcji suplementów. Experience the luxury of a hot oil massage at suksamai massage. podpora plodnosti mužů.