வேலைவாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வீட்டு உதவியாளர் வேலை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 180. ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட்(வீட்டு உதவியாளர்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: Residential Assistant (வீட்டு உதவியாளர்)
மொத்த காலியிடங்கள்: 180
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.07.2001 தேதியின்படி பொது பிரிவினர் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வுகள் மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் வீடுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_84_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.06.2019




















