வணிகம்
8வது ஊதியக்குழு அமலாக்கம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 80% சம்பள உயர்வு விரைவில்!

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. எட்டாவது ஊதியக்குழு (8th Pay Commission) அமலாக்கம் மூலம், அவர்களின் சம்பளம் 80% வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இந்த புதிய ஊதியக்குழுவின் முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இதன் மூலம் சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதிய தொகை மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு 2025 ஜனவரி மாதத்தில் 8வது ஊதியக்குழுவை அங்கீகரித்திருந்தாலும், இதுவரை அதன் உறுப்பினர்கள் மற்றும் Terms of Reference (ToR) அறிவிக்கப்படவில்லை. இதனால் ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து வருகின்றனர்.
அறிக்கைகளின் படி, 1.8 என்ற fitment factor குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. இதன் பொருள், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 80% வரை உயர்வு ஏற்படலாம். இது உறுதி செய்யப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நிதி நன்மையாக அமையும்.
நிதி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், மற்றும் பணியாளர் துறை ஆகியவற்றில் தற்போது இந்த ஊதியக்குழுவைச் சார்ந்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அறிக்கை தயாரித்து செயல்படுத்துவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 7வது ஊதியக்குழு பிப்ரவரி 2014ல் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் ஜனவரி 2016ல் நடைமுறைக்கு வந்தது. இதேபோல், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில், ஊழியர்களுக்கு அரியர் தொகையுடன் (arrears) கூட சம்பள உயர்வின் நன்மை கிடைக்கும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு, பொருளாதார நிலைமையும் வலுப்பெறும் என்று நம்பப்படுகிறது.
















