வணிகம்
ஓய்வூதியம் தாமதம் செய்தா வங்கிகள் ஆண்டுக்கு 8% வட்டி கட்டணம்: ஆர்பிஐ புதிய சுற்றறிக்கை!

வங்கிகளுக்கு ஆர்பிஐ கடும் உத்தரவு: ஓய்வூதியம் வழங்க தாமதமா? ஆண்டுக்கு 8% வட்டி கட்டாயம்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டு, ஓய்வூதியம் மற்றும் நிலுவை தொகைகளை வழங்குவதில் வங்கிகள் தாமதப்படுத்தினால், ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே ஓய்வூதியதாரர்கள் பலரும் தாமதம் தொடர்பான புகார்களை அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 1, 2025 முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதில், அக்டோபர் 1, 2008 முதல் தாமதமாக வழங்கப்பட்ட அனைத்து ஓய்வூதியங்களுக்கும் வட்டி வழங்கப்பட வேண்டும் என்றும், அதை ஓய்வூதியதாரர்கள் கோரிக்கையில்லாமலே அவர்களின் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகள் ஓய்வூதியம் செலுத்தும் செயல்முறையை தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும். ஓய்வூதிய உத்தரவுகள் மற்றும் ஆவணங்களை ஓய்வூதிய அதிகாரிகளிடம் இருந்து விரைவாக பெறும் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
வயதான ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும், வங்கிக் கிளைகள் அதிக அக்கறை மற்றும் அனுதாபத்துடன் செயல்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

















