வணிகம்
ஊரக பகுதிகளில் வியாபாரத்திற்கு தொழில் உரிமம் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

உங்கள் வியாபாரம் அல்லது தொழில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுகிறதா? அப்படியானால், தொழில் உரிமம் பெற்றிருப்பது கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவின் அடிப்படையில், ஊரக பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீ கடைகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக, தொழில் நிறுவனங்களும் உரிய தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இத்துடன் தொழில் உரிமம் பெறுவதற்கான கட்டண விபரங்களும் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டணம், அந்தந்த வணிகத்திற்கான கட்டிட பரப்பளவினை பொறுத்து மாறுபடும். சிறிய அளவிலான கடைகளுக்கு ₹500 முதல் ₹1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்களுக்கு ₹50,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் ஊரக வளர்ச்சி, வருமான வரி ஒழுங்குமுறை மற்றும் முறையான தொழில் கணக்கீடுகளுக்கான வழிவகையாகும். எனவே, உங்கள் வணிகத்திற்கான உரிமம் பெற்றிருக்கிறீர்களா என்பதை உடனே சரிபார்த்து, இல்லையெனில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.























