வணிகம்
PM Kisan 20வது தவணை அப்டேட்: மோசடியில் ஈடுபடாதீர்கள்! பயனாளிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது பல சமூக ஊடகங்களில் மற்றும் மொபைலில் பிஎம் கிசான் 20வது தவணை குறித்து போலியான செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதாக அரசு அறிவுறுத்தியுள்ளது.
PM Kisan 20வது தவணை மோசடி எச்சரிக்கை:
பிஎம் கிசான் திட்டத்தின் பெயரில் தற்போது பல போலி வலைத்தளங்கள், தகவல்கள் மற்றும் லிங்குகள் வைரலாக பரவுகின்றன. குறிப்பாக, “20வது தவணை ரூ.2000 உடனே பெற இந்த லிங்கில் பதிவு செய்யவும்” என பலர் தவறான தகவல்களை பகிர்ந்துவருகின்றனர்.
வேளாண் அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, இந்த மாதிரியான மோசடியால் விவசாயிகள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்தால், அவர்கள் வங்கிக் கணக்குகள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. தவறான பதிவு காரணமாக அவர்களின் அடுத்த தவணை தொகையும் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது.
மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல்:
விவசாயிகள் பிஎம் கிசான் திட்டம் தொடர்பான எந்த தகவலையும், அப்டேட்டையும் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் மட்டுமே உறுதி செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: pmkisan.gov.in
அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கு: @pmkisanofficial
20வது தவணை எப்போது?
பிஎம் கிசான் 20வது தவணை இந்த மாத இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
பயனாளிகள் செய்ய வேண்டியவை:
e-KYC முடிக்க வேண்டும்
ஆதார், வங்கிக் கணக்கு இணைத்திருக்க வேண்டும்
சரியான வங்கி விவரங்களை உறுதி செய்ய வேண்டும்
நில விவர ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்
மொபைல் எண் அப்டேட் செய்திருக்க வேண்டும்
PM Kisan Beneficiary Status எப்படிச் சோதிப்பது?
pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்
‘Beneficiary Status’ தேர்வு செய்யவும்
ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண் உள்ளீடு செய்யவும்
‘Get Data’ கிளிக் செய்து நிலையை தெரிந்து கொள்ளலாம்
பிஎம் கிசான் திட்டம் சார்ந்த எந்த தகவலும் நேரடியாக அரசின் அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து பெற வேண்டும். தவறான தகவல்களை நம்பி மோசடியில் சிக்க வேண்டாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














