வேலைவாய்ப்பு
TNPSC Group 4 தேர்வு 2025: 10ம் வகுப்பு போதும் – 3935 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

TNPSC Group 4 2025: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம், தமிழ்நாடு அமைச்சுப் பணிகள், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், சிறு தொழில் கழகம் உள்ளிட்ட பல துறைகளில் 3935 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இடங்கள் நிரப்பப்படும் முக்கிய பதவிகள்:
கிராம நிர்வாக அலுவலர் (VAO)
இளநிலை உதவியாளர்
தட்டச்சர்
சுருக்கெழுத்து தட்டச்சர்
நேர்முக உதவியாளர்
பால் அளவையாளர்
வனக் காப்பாளர்
வயது வரம்பு விவரம்:
VAO, வனக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கு: 21 முதல் 32 வயது
பிற பதவிகளுக்கு: 18 முதல் 32 வயது
எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவைகள்: 37 வயது வரை தளர்வு
பிசி, எஸ்பிசி, பிடிஎம் பிரிவினர்: 34-37 வயது வரை தளர்வு
சில பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வி தகுதி:
குறைந்தபட்சமாக 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
இளநிலை உதவியாளர் பதவிக்கு பட்டப்படிப்பு தேவை.
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு தொழில்நுட்ப தகுதி தேவை.
ஆய்வக உதவியாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், வனக்காப்பாளர் பதவிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tnpsc.gov.in/
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: மே 25, 2025
திருத்தம் செய்ய கடைசி நாள்: மே 29 முதல் மே 31 வரை
தேர்வு தேதி: ஜூலை 12, 2025
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு பணியில் சேரலாம். விரைந்து விண்ணப்பியுங்கள்!















