Connect with us

வேலைவாய்ப்பு

அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள்: உங்கள் கனவு தொழிலைப் பெற உதவும் துறைகள்!

Published

on

மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து அடுத்த கட்டத்தை எடுப்பதற்கான முடிவுகளை செய்யும்போது, பல சந்தேகங்கள் எழுகின்றன. குறிப்பாக, “எந்த துறை உயர்வாக இருக்கும்?”, “படித்து முடித்தவுடன் வேலை கிடைக்குமா?”, “சம்பளம் அதிகமாக அமையுமா?” போன்ற கேள்விகள் அவற்றில் முக்கியமானவை. இந்த குழப்பங்களை தீர்க்க, அதிக வருமானத்தை அளிக்கும் முக்கிய தொழில்களை பற்றி இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

1. செயற்கை நுண்ணறிவு (AI) இன்ஜினீயர்

நாடுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரும்பி பயன்படுத்தி வருகின்றன. இதன் முக்கியத்துவம் தொடர்ந்து உயரும். AI இன்ஜினீயராகப் பணிபுரிய B.Tech அல்லது Computer Science படிக்க வேண்டும். கூகுள், அமேசான், IBM போன்ற முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. சம்பளம் ஆண்டு ரூ.7 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும்.

2. பிசினஸ் அனாலிடிக்ஸ் (Business Analytics)

தொழில் வளர்ச்சிக்கு பிசினஸ் அனாலிடிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. Economics, Data Science, Statistics போன்ற படிப்புகளை முடித்தவர்கள் இத்துறையில் சிறந்த பணி வாய்ப்புகளைப் பெறலாம். இப்பணியில் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

3. மார்க்கெட்டிங் மேனேஜர் (Marketing Manager)

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், பொருட்களை விற்பனை செய்யவும் Marketing Management அல்லது MBA படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்டு சம்பளம் ரூ.12 லட்சம் வரை கிடைக்கும்.

4. சிஏ (Chartered Accountant)

நிதி மேலாண்மை ஒரு நிறுவனத்தின் முக்கிய அம்சமாகும். இதற்காக ICAI சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். CA ஆக இருந்து ஆண்டு ரூ.9 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையில் சம்பளம் பெறலாம்.

5. ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Full Stack Developer)

இந்த துறை இன்றைய காலகட்டத்தில் மிகுந்த தேவை பெற்ற ஒன்றாக உள்ளது. B.Tech, Front-End மற்றும் Back-End Development படிப்புகளை முடித்து, ஆண்டு ரூ.9 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறலாம்.

மேலும், Data Scientist, Blockchain Developer, Product Manager, Medical Professional போன்ற துறைகளிலும் அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை திட்டமிடுங்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..