சினிமா
நடிகர் நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ரூ.52 கோடி வசூல் சாதனை!

நடிகர் நானி நடித்த ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் உலகம் முழுவதும் 52 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தை, ‘அந்தே சுந்தரானிகி’ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். தெலுங்கில் ‘சரிபோதா சனிவாரம்’ என்ற பெயரில் வெளியான இப்படம் தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என அழைக்கப்படுகிறது. இப்படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சாருலதா என்ற பெண் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ஒரு முக்கியமான பங்காக நடித்துள்ளார்.
29ஆம் தேதி வெளியான இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இந்த வெற்றிகரமான படத்தின் வசூல் 52 கோடியை கடந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Bhaga Bhaga Bhaga..
Bhaga Bhaga Bhaga 🔥#SaripodhaaSanivaaram pic.twitter.com/zsVDRl772X— DVV Entertainment (@DVVMovies) September 1, 2024


















