செய்திகள்
ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி: ஆப்பிள் ஒப்பந்தம் காரணமாக WYNK MUSIC செயலி மூடப்படுகிறது!

ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது, ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற செயலிகளை ஏர்டெல் பயனர்கள் பயன்படுத்தும் வகையில், ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏர்டெல் நிறுவனம் WYNK MUSIC செயலியை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதனால், WYNK MUSIC பயன்படுத்துவோர் பெரும் அதிர்ச்சியுடன் இருக்கிறார்கள்.





















