தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகள்!

சென்னை சாலையில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகள் உலா வர உள்ளன.
சென்னையில் 2008-ம் ஆண்டு வரை இரண்டடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதன் பின்பு முழுமையாக இரண்டடுக்கு பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இரண்டடுக்கு பேருந்துகளை இயக்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருவதாகச் சென்னை மாநகர பேருந்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டடுக்கு பேருந்துகள் சென்னை பிராட்வே – தாம்பரம் வழித்தடத்தில் இயக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டி கொண்ட இரண்டடுக்கு பேருந்துகளைப் போன்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















