உலகம்
சிலிக்கன் வேலி வங்கி, கிரெடிட் சூசி.. அடுத்தது டாய்ட்ச் வங்கியா? நிபுணர்கள் சொல்வது என்ன?

அமெரிக்காவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவால் ஆனதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள வங்கி மேல் வாடிக்கையாளர்கள் ஒரு சந்தேக கண்களை வைத்துள்ளனர் மேலும் ஐரோப்பாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கிரெடிட் சூசி வங்கியும் திவாலான நிலைக்கு சென்றாலும் யுஎஸ்பி அந்த வங்கியை வாங்கி அதனை காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஜெர்மனியின் முன்னணி வங்கிகளில் ஒன்றான டாய்ட்ச் வங்கியின் பங்குகள் திடீரென எட்டு சதவீத சரிந்து உள்ளதை அடுத்து அதன் மீது வாடிக்கையாளர்கள் சந்தேக கண்களை கொண்டுள்ளனர். டாய்ட்ச் வங்கி லாபம் பெற்று வந்த நிலையில் அந்த வங்கி எதனால் திடீரென எட்டு சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் குறைந்தன என்பது குறித்து யாருக்கும் புரியாமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#image_title
ஸ்விட்சர்லாந்தின் இரண்டாவது வங்கியான கிரெடிட் சூசி வங்கியின் திடீர் வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிலிக்கான் வங்கியின் வீழ்ச்சி ஆகியவை காரணமாக டாய்ட்ச் வங்கி அடுத்த குறியாக இருக்குமோ என்று அதிகம் அஞ்சப்படுகிறது. ஆனால் இது குறித்து நிபுணர்கள் கூறும் போது டாய்ட்ச் வங்கி தற்போது மறு சீரமைப்பு செய்துள்ளது என்றும் செலவுகளை குறைப்பதற்கும் லாபத்தை மேற்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் எனவே அந்த வங்கி நஷ்டமாக வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர்.
பங்குச்சந்தையில் ஒரு வங்கியின் பங்குகள் குறைவதும் கூடுவதும் சாதாரண ஒன்று என்றும் எனவே அது குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் டாய்ட்ச் வங்கியின் நம்பகத்தன்மை மற்றும் சொத்து மதிப்புகளில் எந்த விதமாக கவலையும் இல்லை என்றும் இவ்வங்கி மிகவும் பாதுகாப்புடன் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கி போல் டாய்ட்ச் வங்கியும் கடன் வழங்கினாலும் டாய்ட்ச் வங்கி லாபத்தை இயற்றக்கூடியது என்றும் 2023 ஆம் ஆண்டில் இந்த வங்கி நல்ல லாபத்தை பெற்று வருகிறது என்றும் கூறியுள்ளனர்.