உலகம்
இன்றைய வேலைநீக்க செய்தி: 10% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் NPR

ஒவ்வொரு நாளும் வேலை வாய்ப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது போலவே வேலை நீக்க செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் நான் உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்து சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கடந்த ஜனவரி மாதம் முதல் கூகுள் உள்பட பல முக்கிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை செய்ய நீக்கம் செய்துள்ளது என்பதும் இந்த ஆண்டு மட்டுமே வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வேலை நீக்க நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை தளமாக கொண்ட லாப நோக்கமற்ற ஊடக அமைப்பாளர் நேஷனல் பப்ளிக் ரேடியோ என்று கூறப்படும் NPR தனது பத்து சதவீத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக 100 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
எங்கள் அமைப்பின் நிர்வாக செலவை குறைக்கவும் செலவு கட்டமைப்பு மறு சீரமைப்பின் காரணமாகவும் இந்த வேலைநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றோம் என்றும் எங்கள் அமைப்பின் எதிர்காலத்தை பாதுகாக்க நாங்கள் போராடி வருகிறோம் என்றும் NPR நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#image_title
இந்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் ஏப்ரல் 28 வரை வேலையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு அவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மொத்தமாக இந்த அமைப்பில் ஆயிரம் முதல் 1200 ஊழியர்கள் வரை குறைப்பதை நோக்கமாக கொண்டிருந்தாலும் தற்போதைக்கு 10 சதவீத ஊழியர்களை மட்டுமே பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிச்சயமற்ற பொருளாதாரம் காரணமாக கூகுள், அமேசான் மெட்டா உள்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கங்களை மேற்கொண்ட நிலையில் தற்போது வேறு வழியின்றி NPR அமைப்பும் பணி நீக்க நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து NPR தலைமை நிர்வாகி ஜான் லான்சிங் அவர்கள் கூறும்போது பணி நீக்கம் செய்யபப்டும் பணியாளர்களின் புள்ளிவிவரங்களுடன் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் அமைப்பை முன்னோக்கி நகர்த்தும் அத்தியாவசிய தேவை இருப்பதை அடுத்து நாங்கள் இந்த கடினமான முயற்சியை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லாபம் நோக்கம் அற்ற NPR தற்போது அமெரிக்காவில் உள்ள ஆயிரம் பொது வானொலி நிலையங்களின் நெட்வொர்க்கிற்கு தேசிய சிண்டிகேட்டராக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.