Connect with us

பர்சனல் பைனான்ஸ்

செல்வ மகள் திட்டம் v/s பிபிஎப் | பெண் குழந்தைகளுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் எது?

Published

on

இந்தியாவில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்குச் செலவு அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். இப்படி பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் சரியான முதலீட்டு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தால், அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது. பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு ஏற்ற பல முதலீட்டு திட்டங்கள் பயன்பாட்டிலிருந்தாலும், மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டம் கீழ் செயல்பட்டு வரும் சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்) மற்றும் பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் பார்க்கப்படுகின்றன.
செல்வ மகள் திட்டம் மற்றும் பிபிஎப் முதலீட்டுத் திட்டங்களில் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற திட்டங்கள் எவை என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி

சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் திட்டங்களில் ஒன்று பிபிஎப். பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படும்.
பிபிஎப் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை என 25 வருடம் முதலீடு செய்யலாம். தேவைப்பட்டால் கூடுதலாக 5 வருடங்கள் என முதலீட்டை நீட்டிக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 12 தவணையாகவும் முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை இந்த வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். 2020-2021 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 7.1 சதவீத லாபத்தை அளிக்கிறது.

செல்வ மகள் திட்டம் – சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வ மகள் சேமிப்பு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஒரு பார்வை, செல்வ மகள் சிறு சேமிப்புத் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், சுகன்யா யோஜனா திட்டம், Sukanya Samriddhi Yojana in Tamil, sukanya samriddhi yojana scheme, sukanya samriddhi yojana 2018, sukanya samriddhi yojana details, sukanya samriddhi yojana interest rate, selvamagal scheme, selvamagal semippu thittam tamil, selvamagal semippu thittam details
2015-ம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமாக அறிமுகம் செய்ததே சுகன்யா சம்ரிதி யோஜனா என அழைக்கப்படும் செல்வ மகள் திட்டம். இந்த திட்டத்தின் 10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளுக்குச் சேமிப்பு திட்டத்தைத் தொடங்க முடியும். குழந்தையின் வயது 18 ஆன பிறகு அந்த பெண் குழந்தையே அந்த கணக்கை நிர்வகிக்கலாம். பெண் குழந்தையின் வயது 21 ஆகும் போது இந்த கணக்கு முதிர்வடையும். தற்போது இதில் முதலீடு செய்யும் போது 7.6 சதவீத லாபம் அளிக்கப்படுகிறது. கொரோனா பிரச்சனைகள் முடிந்தால் 8.4 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர வாய்ப்புகள் உண்டு. குறைந்தது ஆண்டுக்கு 250 ரூபாய் முதல்  1.50 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.

பிபிஎப் – செல்வ மகள் திட்டம் இரண்டில் சிறந்தது எது?

வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டால் பிபிஎப்-ஐ விட செல்வ மகள் திட்டத்தில் வட்டி அதிகம். எனவே லாபம் அதிகமாகக் கிடைக்கும். பெண் குழந்தைகளுக்காக முதலீடு செய்யும் போது ஒரு திட்டம் என்று இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே செல்வ மகள் மட்டுமல்லாமல் பிபிஎப் திட்டத்திலும் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யலாம். பிபிஎப்-ல் 15 வருடம் வரை முதலீடு செய்து முதிர்வையும் போது அதை எடுத்து பிற திட்டங்களில் முதலீடு செய்யலாம். பிபிஎப், செல்வ மகள் திட்டம் மட்டுமல்லாமல் நல்ல லாபம் அளிக்கும் கடன் திட்டங்கள், மியூச்சுசல் ஃபண்டு போன்றவற்றிலும் பிரித்து முதலீடு செய்யலாம்.
வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?