தமிழ்நாடு
முதல்வரை தீர்மானிக்கும் அமமுக: ஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்?

நாளை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற கருத்துக்கணிப்புகளும் வருகின்றன. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் திமுகவும் அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கின்றன.
இதோடு சேர்ந்து 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளதால் அதிமுக தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளது. திமுக தரப்பே அதிக தொகுதிகளை கைப்பற்றும் சூழல் உள்ளதால் அதிமுக பெரும்பான்மையை இழக்கும். ஆனால் அதே நேரத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை திமுக அடைய முடியுமா என்பதும் சந்தேகமாக உள்ளது.
ஆனால் இந்த இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி மூன்று இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால் முதல்வரை தீர்மானிக்கும் கட்சியாக அது மாறும். ஒருவேளை அதிமுக ஆட்சி கவிழ்ந்தால் ஊழல் வழக்குகளில் பல அமைச்சர்கள் சிறைக்கு செல்ல நேரலாம் என கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி கூடாரம் காலியாகி தினகரன் தரப்பிடமோ, திமுக தரப்பிடமோ அதிமுகவினர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. பல்வேறு அரசியல் மாற்றங்களும் இதனால் ஏற்பட உள்ளது.



















