Connect with us

வார பலன்

வாரபலன்: 2019 ஃபிப்ரவரி 10 முதல் 16 வரை

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

உண்மைக்கு உறைகல்லாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். எதிலும் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

பெண்கள் எண்ணப்படி காரியங் களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;

*******************************************************************************************************

ரிஷபம்:

தன்மானத்துடன் வாழ ஆசைப்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம்.

தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு:நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும்

மாணவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;

*****************************************************************************************

மிதுனம்:

சுகமான வாழ்வு வாழ ஆசைப்படும் மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம். பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் தலை தூக்கும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பெண்கள் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சுக்கிரன்;

***************************************************************************************

கடகம்:

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.

தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.

மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் வெள்ளி

**************************************************************************************

சிம்மம்:

சுத்தத்தை நேசிக்கும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

*******************************************************************************************

கன்னி:

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் கன்னி ராசி அன்பர்களே!. இந்த வாரம். விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

பரிகாரம்: குருவுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;

******************************************************************************

துலாம்:

திறமையாக பேசக்கூடிய துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: வடபழனி முருகனை வணங்கி வர தொல்லைகள் நீங்கும். நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

****************************************************************************************************

விருச்சிகம்:

பொன், பொருள் சேர்க்கையில் நாட்டமுடைய விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

****************************************************************************************

தனுசு:

பேசும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.

குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்

பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சப்தகன்னிகளை வணங்க மனக்குழப்பம் தீரும். காரியங்களில் இருந்த தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

******************************************************************************

மகரம்:

முடிவுகளை தெளிவாக எடுக்கும் மகர ராசி அன்பர்களே! இந்த வாரம். எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: சுந்தரகாண்டம் படித்து பெருமாளை வணங்கி வர சகல நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

.*********************************************************************************

கும்பம்:

பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்

குடும்பத்தில் கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்

பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு: கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங் களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

*********************************************************************************************

மீனம்:

மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாத மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வரவாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

பெண்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

*********************************************************************************************

      Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

      இந்தியா4 மணி நேரங்கள் ago

      மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

      பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

      EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

      இந்தியா8 மணி நேரங்கள் ago

      16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

      தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

      தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

      வணிகம்9 மணி நேரங்கள் ago

      50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

      ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

      30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

      வணிகம்9 மணி நேரங்கள் ago

      ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

      ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

      பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

      கிரிக்கெட்10 மணி நேரங்கள் ago

      உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

      ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

      மார்ச் 7, 2026 கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட உச்சிக்குச் செல்லப் போகிறார்கள்!

      ஆரோக்கியம்6 நாட்கள் ago

      அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

      இந்தியா5 நாட்கள் ago

      அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

      இந்தியா5 நாட்கள் ago

      இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

      கிரிக்கெட்5 நாட்கள் ago

      சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

      சினிமா4 நாட்கள் ago

      ‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

      இந்தியா5 நாட்கள் ago

      மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

      வணிகம்4 நாட்கள் ago

      8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

      கிரிக்கெட்5 நாட்கள் ago

      2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

      வணிகம்5 நாட்கள் ago

      8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

      ஆரோக்கியம்5 நாட்கள் ago

      உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

      Translate »
      Miedz legnica resovia rzeszów [3 listopada 2023] polska i liga 2023 2024. Få flere kaffestop med ai og gratis ruteoptimering. Kernevelfærd arkiv borgernes parti.