கிரிக்கெட்
இது கோலியா? ஆச்சர்யமாக இருக்கிறதே.. ஆட்டமே மாறிடுச்சே.. இதை நோட் பண்ணீங்களா?

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் கோலி இன்று மிகவும் வித்தியாசமாக ஆடினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டதோடு சதமும் அடித்தார்.
பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த தொடரின் கடைசி போட்டி ஆகும் இது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது. முழு நாள் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலிய அணி நிதானமாக ரன் சேர்த்து வண்டஹ்த்து. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதன்பின் இறங்கிய இந்திய அணி தற்போது 475/5 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி நிதானமாக ஆடி சதம் அடித்தார். இதுவரை 295 பந்துகள் பிடித்த விராட் கோலி 138 ரன்கள் எடுத்தார். அவரின் ஆட்டம் இன்று மிகவும் வித்தியாசமாக இருந்தது.
அவர் இன்று குறைவாக பவுண்டரிகளை அடித்தார். இதுவரை 10 பவுண்டரி மட்டுமே அடித்தார்.
அதோடு சிக்ஸ் அடிக்கவே இல்லை.
மிக மெதுவாக ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய விதம் வியப்பை ஏற்படுத்தியது.
எப்போதும் வேகமாக ஆடும் இவர் முதல் முறை இவ்வளவு மெதுவாக டிராவிட் பாணியில் ஆடி இருக்கிறார்.