வணிகம்
தங்கம் விலை இன்று (26/12/2022) அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?
இன்று (26/12/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5086 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 80 ரூபாய் அதிகரித்து 40,688 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
24 காரட் சுத்த தங்கம் விலை 5488 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சவரன் 43,904 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் திங்கட்கிழமை காலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி 24-ம் தேதி முதல் கிராம் 74 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
கிலோ வெள்ளி விலை 74000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.