வணிகம்
பான் கார்ட் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லையா? கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 30ம் தேதி வரை இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பான் கார்ட் என்பது நம்மிடம் உள்ள நிரந்தர கணக்கு எண் ஆகும். இந்த பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கான கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் மார்ச் 31 வரை இதற்கு நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பலரும் இன்னும் இரண்டையும் இணைக்கவில்லை என்பதால் கால வாசகம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயல் இழக்கும். பொருளாதார ரீதியாக எந்த சேவையை தொடங்க வேண்டும் என்றாலும் பான் எண் அவசியம்.
அதாவது வங்கி கணக்கு தொடங்குவது தொடங்கி வங்கியில் பணம் அளிப்பது வரை பான் கார்ட் அவசியம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பவும் பான் கார்ட் அவசியம் ஆகும். அதேபோல் வங்கியில் அதிக பணம் பெற, பணம் சேமிக்க பான் கார்ட் அவசியம். இதெல்லாம் போக வருமான வரி தாக்கல் செய்யவும் பான் கார்ட் அவசியம்.
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்ட் இயங்காது. அதாவது அந்த எண் மொத்தமாக டி ஆக்டிவேட் ஆகிவிடும், என்பது குறிப்பிடத்தக்கது.