Connect with us

இந்தியா

இவர்கள் மட்டும் பான் – ஆதார் கார்டை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.. வருமான் வரித்துறை தகவல்..!

Published

on

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலாற்றதாகிவிடும் என்றும் வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயலிழந்துவிடும் அதன் பின் பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல ஆவணங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

எனவே இதுவரை பான் – ஆதார் கார்டு இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே பலமுறை கால அவகாசம் கொடுத்துள்ளதால் பான் – ஆதார் கார்டுகள் இணைப்பதை காலதாமதம் செய்ய வேண்டாம் என்றும் இனி மேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு சிலருக்கு மட்டும் பான் – ஆதார் இணைப்பு அவசியம் இல்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. அது யார் யாருக்கு என்று தற்போது பார்ப்போம்

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139AA இன் படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு.

1. அஸ்ஸாம், மேகாலயா அல்லது ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்கலில் வசிப்பவர்கள், 1961 இன் படி குடியுரிமை இல்லாதவர்கள், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பான் – ஆதார் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பது எப்படி? என்பதை பார்ப்போம். முதலில்
incometaxindiaefiling.gov.in என்ற இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று, முகப்புப் பக்கத்தில். ‘ஆதார் இணைப்பு’ பகுதியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். அதில் கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும். ’இணைப்பு’ என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் உள்ளிட்ட விவரங்கள் உங்கள் பான் மற்றும் ஆதார் பதிவுகளுடன் பொருந்தினால் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் கார்டுடன் வெற்றிகரமாக இணைக்கப்படும்.

மேலும் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எண்களை SMS அனுப்புவதன் மூலம் ஒருவர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம். மேலும் அருகிலுள்ள பான் சேவை மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்.

பான் ஆதார் இணைப்பு நிலையை சரிபார்ப்பது எப்படி என்பதை தற்போது பார்ப்போம். ஆன்லைனில் உங்கள் பான் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய https://pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும். உங்கள் பான் எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். இப்போது உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பின் நிலை திரையில் தோன்றும்.

வணிகம்4 நாட்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி1 வாரம் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்2 வாரங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு4 வாரங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு1 மாதம் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்1 மாதம் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!

வணிகம்1 மாதம் ago

தங்கம் விலை குறைவு, வெள்ளி விலை உயர்வு (22/08/2023)!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!