Connect with us

தமிழ்நாடு

இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல: தமிழிசை செளந்திரராஜன்

Published

on

நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளர்ச்சி அடைவது தான் பெண்ணுரிமையே இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மேலும் பேசியதாவது:

மற்ற மாநிலங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தமிழகத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வளவு தடைகள் போட்டாலும், அதனை உடைத்து எறிந்து மேலே வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

பெண்களுக்கு சம உரிமை கிடைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆண்களுக்கு கட்டுப்பாடு என்பது வீட்டில் வைப்பது இல்லை. பெண்களுக்கு மட்டுமே வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தால் தான் பெண்களிடம் அவர்கள் சரியாக நடந்து கொள்வார்கள்.

பெண்ணுரிமை எது என்று நாம் நினைப்பதில் தான் பிரச்சினை ஏற்படுகிறது. நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் வேண்டும், மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உடை அணிய கூடாது. உடையில் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டும்.

எனவே நன்றாக படிக்க வேண்டும், சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் உரிமையே தவிர, இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் தற்கொலை தீர்வு என்பது தீர்வல்ல, பெண்கள் அதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க கூடாது.

பெண்களின் பாதை எப்போதும் மலராக இருக்காது, கல்லும் முள்ளும் உள்ள பாதையாக தான் இருக்கும். அதை தாண்டி தான் கோட்டையை அடையும் எண்ணத்தை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு இரும்பு போன்றவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வீடுகள் தான் பாதுகாப்பு என்று நினைத்து கொண்டிருந்த சூழ்நிலையில், வீட்டிலும் பாதுகாப்பு இல்லை என்கிற உணர்வை புரிய வைத்தது இந்த கொரோனா காலம். நம் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் வைரஸை விட ஆபத்தானவர்கள் உள்ளதாகவும், அதற்காகவே பள்ளிகளை சீக்கிரம் திறக்க வேண்டும் என்கிற முடிவை அரசுகள் எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி உஜ்வாலா போன்ற திட்டங்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, சம உரிமையை பெற வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஒரு ஆண் கையில் இருக்கும் பணத்தை விட, பெண் கையில் பணம் இருந்தால் அந்த வீடே பயன்பெறும். ஆண்கள் பெண்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் பாலியல் தற்கொலைகள், தொந்தரவுகள் வரக்கூடாது என்பது தான் எனது விருப்பம்.

பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையில் அமைப்புகள் இருக்க வேண்டும் . என்னிடம் வந்து உதவி கேட்டு வரும் பெண்களுக்கு எப்போதும் என்னுடைய அலுவலக கதவுகள் திறந்து இருக்கும். இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் பேசினார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?