ஆட்டோமொபைல்
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்! இடத்தை இறுதி செய்யும் முனைப்பில் தமிழ்நாடு அரசு!

ராமேஸ்வரம்: தமிழ்நாடு அரசு, ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விமான நிலையம் அமைக்க ராமேஸ்வரத்தை சுற்றி 5 இடங்களை தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளது. இதில் இருந்து சிறந்த ஒரு இடத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) விரைவில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் விமான நிலையம், ஒரே ரன் வேயுடன், போயிங் 737, ஏர்பஸ் A320 போன்ற Code C வகை விமானங்கள் இயக்கக்கூடிய வசதியுடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அதோடு, மண்டல வளர்ச்சி, முதலீடுகள், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்படும் என தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் மூலம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் தூண்டப்படும்.










