வணிகம்
தீபாவளி ஆஃபர்கள் 2025 – தமிழ்நாடு அரசு 30% தள்ளுபடியில் புடவைகள் வழங்கும் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு சலுகை!

தீபாவளி ஆஃபர்கள் 2025: தமிழ்நாடு அரசு பெண்களுக்காக 30% தள்ளுபடியில் புடவை விற்பனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பெண்களுக்காக சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வழியாக, புதிய பட்டுப்புடவைகள் மற்றும் பல்வேறு ஆடைகள் 30% சிறப்பு தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன.
கடந்த 90 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ், இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு ஆடை விற்பனையை தொடங்கியுள்ளது. இதில்,
காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சுங்குடி சேலைகள்
பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள்
பனியன் ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், கைத்தறி ஆடைகள்
ஆர்கானிக் பருத்தி ஆடைகள், லினன் சட்டைகள், கதர் ஆடைகள்
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல வகைகள்
என புது வடிவமைப்பிலான துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களுக்கு, கடன் வசதியுடன் 30% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.178 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்காசியிலும் ரூ.35 லட்சம் மதிப்பிலான துணிகள் விற்பனை இலக்குடன் ஆடை கண்காட்சி தொடங்கியுள்ளது.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மாதாந்திர சேமிப்பு திட்டமும் சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. இதில், மாதம் ரூ.300 முதல் 11 மாதங்கள் தவணை செலுத்தியவர்கள், 12ஆவது தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். முதிர்வுத் தொகையில் இருந்து 30% தள்ளுபடியில் துணிகள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த தீபாவளி ஆஃபர் மூலம், பெண்கள் சலுகையுடன் புடவைகள் வாங்கிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதோடு, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த உதவ முடியும்.