Connect with us

இந்தியா

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்… பொங்கிய எழுந்த கதக் நடனக்கலைஞர்கள்!

Published

on

பெண் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து கதக் நடன கலைஞர்கள் பொங்கி எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது மட்டுமின்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். இதனை அடுத்து இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

அவர் நீதிமன்றத்தில் தான் அந்த பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அந்த பெண் தனக்குத்தானே சிறுநீர் கழித்து கொண்டு தான் மீது பழி போடுவதாகவும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது. அது மட்டும் என்று அந்த பெண் ஒரு கதக் நடன கலைஞர் என்றும் ஒரு கதக் நடனக்கலைஞருக்கு சிறுநீர் பிரச்சனை இருக்கும் என்றும் அவர் தெரிவித்ததுதான் தற்போது கதக் நடன கலைஞர்களை பொங்கி எழ வைத்துள்ளது.

இது ஒட்டுமொத்த கதக் நடன கலைஞர்களை அவமானப்படுத்தும் கூற்று என்றும் முட்டாள்தனமான அபத்தமான கருத்து என்றும் கதக் நடன கலைஞர் ஷோபனா நாராயணன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு நபர் சிறுநீர் கழிப்பதற்கும் கதக் நடனம் ஆடுவதற்கும் என்ன எந்த தொடர்பும் இல்லை என்றும் இது போன்ற முட்டாள்தனமான ஆதாரமற்ற வாதத்தை நீதிமன்றத்தில் எப்படி வைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒரு பெண் தனக்கு தானே சிறுநீர் கழித்து கொண்டால் அது இருக்கையில் மட்டும் தான் அந்த சிறுநீர் கழிக்க முடியும் என்றும் உடல் முழுவதும் எப்படி ஒரு பெண்ணால் சிறுநீர் கழிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

30 ஆண்டுகளாக கதக் நடன பயிற்சி செய்து வரும் மனிஷா என்பவர் இது குறித்து கூறியதாவது கதக் நடன கலைஞர்களுக்கு இடுப்பு பகுதி பயன்பாடு அதிகம் இருக்கும் என்றும் அதனால் மையப்பகுதி வலுவடைகிறது என்றும் ஆனால் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர் என்று யார் கூறினாலும் அது தவறானது மற்றும் அபத்தமானது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சங்கர் மிஸ்ரா மீது கதக் நடன கலைஞர்கள் தனியாக ஒரு அவதூறு வழக்கை தொடர இருப்பதாக கூறப்படுவதால் இந்த விவகாரம் மேலும் பெரிய பிரச்சனையாகும் என தெரிகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?