இந்தியா
லக்கேஜ் இல்லாத விமான பயணமா? கட்டணத்தில் பெரும் சலுகை..!

லக்கேஜ் இல்லாமல் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்க இந்திய விமானத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய விமான சேவை கட்டுப்பாட்டு ஆணையம் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை அளிக்க விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக கையில் ஒரு ஹேண்ட் பேக் மட்டும் வைத்திருக்கும் பயணிகள் விமான கட்டணத்தில் கணிசமான சலுகையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண சலுகை மூலம் விமான பயணிகளை புதிதாக ஈர்ப்பது மட்டுமின்றி குறைந்த விலையில் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் உள்நாட்டு விமான பயன்களுக்கு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் வெளிநாட்டு பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகை கிடையாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரே ஒரு கைப்பை மட்டும் வைத்திருக்கும் பயணிகளுக்கு குறைந்த விமான கட்டணத்தை வழங்க இந்திய விமான சேவை கட்டுப்பாட்டு நிறுவனம் தயாராகி வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஒரே ஒருவர் பிசினஸ் பயணமாக சென்றாலும் அல்லது லக்கேஜ் இன்றி பயணம் சென்றாலும் மிகக்குறைந்த விலையில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒரு பயணி ஏழு கிலோ வரை கேபின் லக்கேஜ் மற்றும் 15 கிலோ வரை செக்கிங் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் இருக்கும் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செக்-இன் லக்கேஜ்கள் இல்லாமல் கையில் ஒரு ஹேண்ட் பேக் மட்டும் வைத்திருக்கும் பயணிகள் சிறப்பு சலுகையை பெறுவார்கள் என்றும் இது விரைவில் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வந்தாலும் பெரும்பாலான பயணிகள் லக்கேஜ் இல்லாமல் பயணம் செய்யவில்லை என்பதால் அது நடைமுறைக்கு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தற்போது அதிக விமான பயணிகளை ஈர்க்க வேண்டும் என்ற வகையில் இந்த சலுகையை மீண்டும் வழங்க இருப்பதாகவும் இதன் காரணமாக ஏராளமான பயணிகள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா விமான நிறுவனங்களில் கையில் ஹேண்ட் பேக் மட்டும் வைத்திருக்கும் விமான பயணிகளுக்கு சலுகை கட்டணம் ஏற்கனவே வழங்கி வரும் நிலையில் தற்போது இந்திய விமான நிறுவனம் இந்த சலுகையை வழங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா, ஏர் இந்தியா உள்பட சில விமான நிறுவனங்கள் லக்கேஜ் இல்லாமல் செல்லும் பயணிகளுக்கு சலுகையை அறிவிக்க உள்ளன என்பதும் இதனால் விமானங்களில் பயணம் செய்பவர்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புதிய விதியானது கையில் வைத்திருக்கும் ஹேண்ட் பேக்கின் எடைக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது தங்களுடைய ஹேண்ட் பேக்கில் எடுத்துச் செல்லும் பொருள்களின் எடையையும் குறிப்பிட வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.