தொழில்நுட்பம்
குடியரசு தின சிறப்பு தள்ளுபடி! அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டலில் எக்கச்சக்க ஆஃபர்!!

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங்கில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாம்ங்க் எம்51 ஸ்மார்ட்போனின் விலை 2,000 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 6.7 இன்ச் அளவிலான பெரிய திரை, 7000 mAh சக்தி கொண்ட பேட்டரி, 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதே போல் ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை 18,999 ரூபாய் ஆகும். தறபோது இது 14,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தை பெயர் மாற்றம் செய்யாமல் ஜியோ கையில் எடுத்துள்ளது. அதனால் ஜியோவைப் போலவே ரிலையன்ஸ் டிஜிட்டலிலும் எக்கச்சக்க ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து டிஜிட்டல் பொருட்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்காக லேப்டாப் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செல்போன்கள் சற்று பழைய ஸ்மார்ட்போன்களாக இருந்தாலும், அதற்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 76 ஆயிரம் ரூபாய் லேப்டாப் கிட்டத்தட்ட 60000 ரூபாய்க்கு கிடைக்கிறது.