வணிகம்
IMPS விதிகளில் புதிய மாற்றம்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இணையதள வங்கி சேவையில் நொடிகளில் பிற வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப உதவும் முறையே IMPS.
இன்று ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்திற்குப் பிறகு வெளியான அறிவிப்பில், IMPS பணப்பரிமாற்ற வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி ஆரிபிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.

IMPS வங்கி பரிமாற்ற சேவையை மேலும் மெருகேற்ற இந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.5 சதவீதமாகத் தொடருகிறது.
















