பிற விளையாட்டுகள்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் இத்தனை கோடியா? தமிழக முதல்வரை காப்பியடித்த இந்தியன் ரயில்வே!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையை அறிவித்தார் என்பது தெரிந்ததே
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் மூன்று கோடி வழங்கப்படும் என்றும், வெள்ளிப்பதக்கம் என்றால் ரூபாய் இரண்டு கோடியும், வெண்கல பதக்கம் என்றால் ஒரு கோடியும் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சற்று முன் இதே போன்ற ஒரு அறிவிப்பை இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. தங்கப்பதக்கம் வெல்பவருக்கு மூன்று கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு இரண்டு கோடியும் வெண்கல பதக்கம் வெல்பவருக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு இந்த சிறப்பு பரிசை இந்தியன் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.2 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியன் ரயில்வே சார்பில் 25 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் 5 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பிசியோதெரபிஸ்ட் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













