சினிமா செய்திகள்
‘புளி மாங்கா புளிப்பு’- சந்தானத்துக்காக சந்தோஷின் கானா குத்து சாங் #ParrisJeyaraj

சந்தானம் மீண்டும் ஹீரோவாக கலக்க இருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘A1’ திரைப்பட கூட்டணி தான் இந்தப் படத்துக்கும் கை கோர்த்துள்ளது.
ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு இசையமைத்து தெறிக்கவிட்ட, சந்தோஷ் நாராயணன் தான் பாரிஸ் ஜெயராஜுக்கும் இசை.
இன்னும் ஒரு சில மாதங்களில் வெள்ளித்திரையை அலறவிட உள்ளது பாரிஸ் ஜெயராஜ். இந்நிலையில் அந்தப் படத்தின் ‘புளி மாங்கா புளிப்பு’ பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.
A Pakka Gaana Treat from @Music_Santhosh !!
Now Playing – #PuliMangaPulip video song from @iamsanthanam‘s #ParrisJeyaraj ????
▶️https://t.co/xakKuagfFV#JohnsonK #LarkStudios @Kumarkarupannan @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R #GaanaMuthu pic.twitter.com/0MIrdrHl2z— Think Music (@thinkmusicindia) January 22, 2021
சந்தானம் படத்திற்கு ஏற்றது போல, முழுக்க முழுக்க கானாவில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். அதிலும் ‘வலி மாமே வலிப்பு… புளி மாங்கா புளிப்பு’ என்று ரிப்பீட் ஆகும் வரி, இளைஞர்கள் உதடுகளில் வெகு நாட்களுக்கு முணு முணுக்கப்படும்.
‘புள்ளிங்கோ’ பாடல்களை விரும்பும், கானாவுக்கு ஏங்கும் அனைவருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.
மரண மாஸ் குத்துப் பாடலைப் பார்க்க: