வணிகம்
மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுவோருக்கு இனி வருமானவரி இல்லை! – நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
இந்தியாவின் நடப்பு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார். மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர்கள் இனி வருமானவரி கட்டத் தேவையில்லை. இதுவரை ரூ.7 லட்சமாக இருந்த வருமான வரிக்கான உச்ச வரம்பு தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், சொந்த வீடு வாங்குவோருக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைக்கான TDS (Tax Deducted at Source) உச்ச வரம்பும் ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் உள்ளிட்ட 36 முக்கிய உயிர்காக்கும் மருந்துகளுக்கான இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனது பட்ஜெட் உரையின் போது, திருக்குறளை மேற்கோள்காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் கலாச்சாரத்தையும் அறநெறிகளையும் பாராட்டினார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















