சினிமா செய்திகள்
ஹாலிவுட் உலகில் கதாநாயகி வாய்ப்பு பெற்ற விஷால் பட நாயகி..!

நடிகை நீது சந்திரா ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் கதாநாயகி ஆக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவருக்கு இந்திய சினிமா துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில் முன்னணி நாயகியாக நடித்தவர் நீது சந்திரா. தெலுங்கு, போஜ்புரி, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். பிஹாரைச் சேர்ந்த நீது சந்திரா தற்காப்புக் கலைகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்.
இதனாலேயே நீதுவுக்கு ஹாலிவுட் அமைந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். நெவர் பேக் டவுன்: ரிவோல்ட் என்ற ஹாலிவுட் படத்தில் தற்போது கதையின் நாயகியாக நடித்து வருகிறார். டேக்வோண்டோ போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பாக மூன்று முறை சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டவர் நீது சந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கிரேக்க படம் ஒன்றிலும் நீது சந்திரா நடித்திருந்தார். நல்ல கதை அம்சம் இருந்தால் போதும் உலகின் எந்த மூளைக்குச் சென்றும் நடிக்கத் தயார் என்கிறார் நீது.
❤ Thank you London, Britain for so much love and care. Another history with you, everything empowered me!!! ????????❤ Will see you soon ???? #NEVERBACKDOWN Revolt #sonymotionpictures #Hollywood #action #movie ???????? COMPLETED pic.twitter.com/dD7S6xLW2f
— Neetu Chandra Srivastava (@Neetu_Chandra) December 17, 2020














