உலகம்
பிரபல நடிகரின் மொபைல் நிறுவனம் விற்பனை.. ரூ.11,000 கோடி என தகவல்..!

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு சொந்தமான மொபைல் நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் என்பவர் ‘டெட்பூல்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் முதலீட்டராக இருக்கும் மிண்ட் மொபைல் என்ற தொலைதொடர்பு நிறுவனம் T-Mobile என்ற நிறுவனத்திற்கு 1.35 பில்லியன் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 11,135 கோடி ஆகும்.
இது குறித்து நடிகர் ரியான் ரெனால்ட்ஸ்தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி உள்ளார். நான் ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. அதே போல் அந்த நிறுவனத்தை நான் டி மொபைல் நிறுவனத்திற்கு விற்பேன் என்றும் நினைத்து கூட பார்க்கவில்லை. வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. நான் மிகவும் பெருமையுடனும் நன்றியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மிண்ட் மொபைலின் பங்குகளை நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் வாங்கி இருந்தார் என்பதும் சுமார் 25 சதவீத பங்குகளை அவர் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த வர்த்தகத்தின் மூலம் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் சுமார் 70 மில்லியன் டாலர் ரொக்கமாகவும் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள T-Mobile பங்குகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
270 மில்லியன் சம்பளம் வரும் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் இந்த வணிக ஒப்பந்தம் காரணமாக உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் ஒருவராக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே போர்ப்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் 300 மில்லியன் டாலர் கொண்ட நடிகர் என்று அவர் இருந்து வரும் நிலையில் தற்போது அவருடைய பட்டியலில் இடம் மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.