இந்தியா
வீட்டில் இருக்கும்போது நிர்வாணமாக இருக்க வேண்டுமாம்.. கணவர் போட்ட கண்டிஷனால் மனைவி அதிர்ச்சி..!

உலகில் உள்ள கணவன் மனைவிகளுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் வரும் என்பதும் ஆனால் அந்த பிரச்சனைகள் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் வீட்டில் தனியாக இருக்கும்போது ஆடை இல்லாமல் நிர்வாணமாக இருக்க வேண்டும் என வற்புறுத்துகிறார் என கூறி அவரை பிரிய விரும்புவதாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதலை எங்கள் பெற்றோரை ஏற்காததால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்தது. அதன் பிறகு நாங்கள் நீதிமன்றம் சென்று எங்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்கி கொண்டோம்.
எங்கள் வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென என் கணவரால் எனக்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது. நாங்கள் தனியாக குடியேறி சில மாதங்கள் ஆன நிலையில் எங்கள் இருவருக்கும் எந்த விதமான ஒளியும் மறைவும் இருக்கக்கூடாது என்பதை நாங்கள் முதலில் முடிவு செய்தோம் ஆனால் அதுவே நாளடைவில் பிரச்சனையானது.

#image_title
நாம் பாத்ரூம் செல்லும்போது கதவை பூட்டினால் கூட நமக்குள் ஒளிவு மறைவு இருக்க கூடாது தானே? இதற்காக பாத்ரூம் கதவை மூடுகிறாய் என்று அவர் கேட்பார். ஆரம்பத்தில் இதை நான் ரசித்தாலும் அதன் பிறகு போக போக இது எனக்கு அருவருப்பாக தெரிந்தது. நான் குளியல் அறையில், கழிப்பறையில் இருப்பதை அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனக்கு தர்ம சங்கடமாக இருக்கும். இருப்பினும் நான் அவரது இந்த செயலை பொறுத்துக் கொண்டிருந்தேன்.
இந்த நிலையில் வீட்டில் வேலைக்காரர்கள் வெளியேறிய பின்னர் இருவருமே நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் முதலில் விளையாட்டுக்காக தான் இதை கூறுகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் உண்மையாகவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தனது ஆடைகளை களைந்து என்னையும் நிர்வாணமாக இருக்கச் சொன்னது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஒரு பெண் எனக்கு, என் சொந்த உடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு எனக்கு உள்ளது. அவர் என் உடலை நேசிக்கிறார் என்றாலும் வீட்டில் இருக்கும் அனைத்து நேரத்திலும் நிர்வாணமாக இருப்பது என்பது எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் அவருக்காக இதை செய்ய முயற்சித்தேன்., ஆனால் அப்போது அவருடைய செயல்கள் எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாணமாக இருக்கும் போது அவர் என் பிட்டத்தை அடிப்பார், என் மார்பகங்களை கிள்ளுவார்.
நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் என்றாலும் உடல் உறவுக்கு என்று ஒரு நேரம் இருக்கிறது, ஒரு அந்தரங்க இடம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் அனைத்து நேரமும் நிர்வாணமாக இருப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அந்த மனிதனை நான் மிகவும் ஆழமாக நேசிக்கிறேன் ,அவருடனான உறவு எனக்கு நீடிக்க வேண்டும் என்று தான் விருப்பம். ஆனால் அவருடன் அனைத்து நேரத்திலும் நிர்வாணமாக இருப்பது என்பது எனக்கு சாத்தியம் இல்லை. எனவே நான் பிரிய முடிவு செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.