Connect with us

செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம் – தமிழக அரசு புதிய வசதி!

Published

on

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ள புதிய வசதி

தமிழக அரசு, “உங்களுடன் ஸ்டாலின்” (https://ungaludanstalin.tn.gov.in) என்ற சிறப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தி, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்களுக்கு எளிமையாக வழங்கி வருகிறது.

இந்த இணையதளத்தின் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 15, 2025 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தமிழக முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆதார் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 40% மகளிர் உரிமைத் தொகை தொடர்பானவை என தெரிவித்தார். மேலும் தகுதிவாய்ந்த பெண்களுக்கு விரைவில் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆன்லைனில் விண்ணப்ப நிலையை அறிய எப்படி?

  1. முதலில் https://ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

  2. “Track Your Application Status” என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. புதிய பயனர் என்றால் New User? Signup என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.

  4. OTP மூலம் சரிபார்த்த பின் பயனர் கணக்கு உருவாகும்.

  5. அதன்பிறகு மொபைல் எண் மூலம் லாகின் செய்து, உங்கள் கோரிக்கை நிலையை எளிதாக பார்வையிடலாம்.

இதன் மூலம் நிலுவையில் உள்ள கோரிக்கை, முடிவுற்ற கோரிக்கை, பரிசீலனையில் உள்ள கோரிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா13 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
提供 專業網頁設計 服務,包括創意 網頁設計 、 網頁開發 、響應式設計和 網頁優化 等。我們的專業團隊將為您打造吸引人的網絡存在,創建獨特的線上體驗,並提供優質的用戶體驗和搜尋引擎可見性。我們還提供 網頁內容管理 服務,使您輕鬆創建和更新網站內容。.