செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரூ.1000 கிடைத்த மகளிரின் உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்கள்!
Published
4 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு பெண்களின் பொருளாதார சுயநிலையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற நிகழ்ச்சியில், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் விளக்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியிலேயே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பயனாளிகளாக இருந்த 1.13 கோடி பெண்களுடன், கூடுதலாக 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் சேர்க்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
பலர் மாதம் 1ஆம் தேதி தொகை வழங்கப்படும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அரசு விளக்கம் அளித்ததாவது, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியில்தான் மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
திருவிடைமருதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கலைவாணி, “எனது வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த தொகை மருத்துவ செலவுகளுக்கும், குடும்ப தேவைகளுக்கும் பெரிதும் உதவுகிறது. இனி சின்ன செலவுகளுக்காக மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
அதேபோல், கும்பகோணத்தைச் சேர்ந்த ரூபாதேவி, “முதல் கட்டத்தில் எனக்கு இந்த உதவி கிடைக்காததால் மனவருத்தம் இருந்தது. ஆனால், இரண்டாம் கட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்தேன். தற்போது ரூ.1000 கிடைத்துள்ளது. இந்த தொகை குடும்ப தேவைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது” என கூறினார்.
இத்திட்டத்தில் இதுவரை தொகை கிடைக்காத பெண்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் அல்லது KMUT.com இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த முறையீட்டை செய்ய முடியும்; புதிதாக விண்ணப்பிக்க தற்போது வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தேர்தல் டிரென்ட் செட்டர்: 1.31 கோடி பெண்கள் வாக்கை இலக்காக வைத்த திமுக!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மாதம் ₹1000-ஐ இரட்டிப்பாக்கும் 4 சிறந்த சேமிப்பு வழிகள்!

தமிழ்நாடு அரசின் புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் பரிசு: லேட்டஸ்ட் அப்டேட்!














