Connect with us

ஆன்மீகம்

மதுரை சித்திரைத் திருவிழா: வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Published

on

சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த மே மாதம் 2 தேதி காலையில் வெகுவிமரிசையாக நடந்தது.

மதுரை அழகர் கோவில்

மதுரை அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே மாதம் 1 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது உலகப் புகழ்பெற்ற சிறப்பு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

வைகையில் கள்ளழகர்

நேற்று (4 ஆம் தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் கள்ளழகரை எதிர் கொண்டு வரவேற்கும் எதிர் சேவை சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இரவில் தல்லாகுளத்தில் இருக்கும் பெருமாள் கோவிலை அடைந்தார். விடிய விடிய கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை கள்ளழகர் சூடி, தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக் குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்று காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

கோவிந்தா… கோவிந்தா…

ஆழ்வார்புரம் மற்றும் வடகரை பகுதியில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பவனி வந்தார். கோவிந்தா… கோவிந்தா… என்ற கோஷத்துடன் இலட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கி வழிபட்டனர். பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். வெள்ளிக் குதிரையில் வீரராகப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.

காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல இலட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர். இதனால் மதுரை மாநகரம் விழாக் கோலத்துடன் காட்சி அளிக்கிறது.

author avatar
seithichurul
வேலைவாய்ப்பு2 நிமிடங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்11 நிமிடங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா26 நிமிடங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு38 நிமிடங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்44 நிமிடங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு55 நிமிடங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா