Connect with us

தமிழ்நாடு

மனித வெடிகுண்டாக மாறுவோம்: கனலை கக்கிய ஆர்.பி.உதயகுமார்!

Published

on

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு தொடருமானால் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

#image_title

சிவகங்கையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமியை பார்த்து கோஷமிட்டு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார் அமமுக நிர்வாகி ஒருவர். அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டை பிடித்து இழுத்து வந்து அதிமுகவினர் சிலர் தாக்கினர்.

இதனையடுத்து, முகநூலில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்ஃபோனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகார் அளித்தார் அமமுக நிர்வாகி.

இந்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, அவரது உதவியாளர் கிருஷ்ணன், எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக பிரமுகரை தாக்கிய புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக முறையில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலினுடைய ஏவல் துறையாக காவல்துறை கண்ணியம் இழந்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் சர்வாதிகார போக்கு தொடருமானால் மதுரையில் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அதிமுக தொண்டர்கள் ஜெயிலுக்கு போவதற்கு பயந்தவர்கள் இல்லை. பல ஜெயில்களை நாங்கள் பார்த்துள்ளோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரையிலர் தான். திமுகவின் பூச்சாண்டிக்கு அதிமுக பயப்படாது என்றார்.

சினிமா8 mins ago

லியோ படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சினிமா20 mins ago

சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

சினிமா9 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு9 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா9 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா10 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்10 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

இந்தியா10 hours ago

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

சினிமா செய்திகள்12 hours ago

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சினிமா செய்திகள்12 hours ago

இளையராஜா இசையில் பாட மறுத்தத வானி ஸ்ரீ.. யார் இவர்?

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+