Connect with us

விமர்சனம்

‘மதகஜராஜா’ திரை விமர்சனம்!

Published

on

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கி 12 வருடங்களாக ரிலீஸ் ஆகாமலிருந்த படம் மதகஜராஜா இன்று (ஜனவரி 12, 2025) ரிலீஸ் ஆகியுள்ளது. அதன் விமர்சனத்தை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
தனது ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் விஷால் அஞ்சலியை காதலித்து வருகிறார். சந்தானம், நித்தின் சத்யா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் சடகோப்பன் ரமேஷ் இவரது நண்பர்கள்.
இவர்கள் அனைவரும் தனது பள்ளி ஆசிரியரின் மகள் திருமணத்தில் சந்திக்கிறார்கள். அப்போது சந்தானத்திற்கும் அவரது மனைவிக்கும் உள்ள பிரச்சனையை அறிந்து சரி செய்கிறார். அதே போல சென்னையில் சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யாவிற்கும் சோனு சூட்டிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதை அறிந்து அதனை சரி செய்ய போகிறார். அது என்ன ஆனது என்பதே மதகஜராஜா படத்தின் கதை.
தமிழ் சினிமா கடந்த 12 வருடத்தில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ள நிலையில், சுந்தர் சி எப்போதும் தனது பழைய தனித்துவமான காமெடி கலந்த கதையில் படத்தை இயக்கியுள்ளார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு படம் ரசிக்கும் படி உள்ளது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதை காமெடி காட்சிகள் சரி செய்துவிடுகின்றன.
விஷால் வழக்கமான சுந்தர் சி பட ஹீரோக்கள் போல துறுதுறுவென சிறப்பாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதிலிருந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்காமலிருந்து வந்த நிலையில், இதில் அவரது டைமிங் கவுண்டர்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன.
அஞ்சலி, வரலட்சுமி இருவரும் கிளாமரை தெளித்துவிட்டுள்ளார்கள். அவர்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, நித்தின் சத்யா, சடகோபன் ரமேஷ் என அனைவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிற மணிவண்ணனைத் திரையில் காண்பது மகிழ்வைத் தருகிறது.
விஜய் ஆண்டனியின் இசை அனைவரையும் தாளம் போட வைக்கிறது. பாடல்களும் ரசிக்கும் படி உள்ளது.
“மதகஜராஜா” ஒரு காலப்போக்கில் தொலைந்து போன திரைப்படத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக இருக்கிறது. சில குறிப்பிட்ட தருணங்களில் பாரம்பரிய தமிழ் மசாலா சினிமாவின் மகிழ்ச்சியையும் மீண்டும் அளிக்கிறது. இது நம் பழைய திரைப்படங்களின் ஆத்மாவை கொண்டுள்ள ஒரு சுவாரஸ்யமான படம்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Career spouse children. These latest punjab school education department management posts lahore 2025 are a golden opportunity for candidates looking to build a long term career in the public education sector. private jobs.