ஆன்மீகம்
செப்டம்பர் 12 லட்சுமி நாராயண ராஜயோகம் – அதிர்ஷ்டம் சேர்க்கும் ராசிகள் யாவர்?

செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் பல கிரக நிலைகளால் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், செல்வ வளத்தையும் தரப்போவதாக கூறப்படுகிறது.
இந்த முக்கிய காலகட்டத்தில் சுக்கிரன் சிம்ம ராசியில் நுழைவதும், அதேசமயம் புதன் கன்னி ராசிக்கு மாறுவதும் லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், ஆரோக்கிய மேம்பாடு ஆகியவற்றை அளிக்கவுள்ளது.
லட்சுமி நாராயண ராஜயோகத்தால் நன்மை பெறும் ராசிகள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் செப்டம்பர் 12 முதல் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை காண்பார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு, செல்வாக்கு அதிகரிப்பு போன்றவை ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களின் சிரமங்கள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான துணையை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் வெற்றி கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிதி பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சி ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் வலுவாக இருக்கும். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.




















