தமிழ்நாடு
ரூ.12 கோடி பரிசு.. தென்காசியைச் சேர்ந்தவருக்கு கிடைத்த அதிர்ஷடம்!

தென்காசியைச் சேர்ந்தவருக்கு கேரள லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோடையில் உள்ள ரவ்யதர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்புதீன். இவர் கடந்த 17 ஆம் தேதி கேரளாவுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஆரியங்காவு பகுதியில் வெங்கடேஷ் என்பவரிடம் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டை 300 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
இதனையடுத்து லாட்டரி முடிவுகள் வெளிவந்த நிலையில், வெற்றியாளர் யார் என்பது கேரள லாட்டரி பிரியர்கள் தெரியாமல் இருந்தனர். அப்போது சர்புதீன் தனது சகோதரர்களுடன் திருவனந்தபுரம் சென்று லாட்டரியை டெப்பாசிட் செய்தார்.
அதன்பிறகே லாட்டரியில் வெற்றி பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சர்புதீனுக்கு 12 கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பெருமகிழ்ச்சி வெள்ளத்தில் சர்புதீன் உள்ளார். தமிழகத்தில் லாட்டரியால் பல குடும்பங்கள் சீரழிந்து, லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மக்கள் கேரளா சென்று லாட்டரி வாங்கி வருகின்றனர்.



