செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர்!
Published
8 மாதங்கள் agoon
By
Poovizhi
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் பயனாளியாக சேர ரேஷன் கார்டு கட்டாயம். அதனால், இதுவரை ரேஷன் கார்டு பெறாதவர்கள், முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் உள்ளிட்ட பலரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வழியாக புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
வீடு இல்லாதவர்கள் வாடகை வீட்டு ஒப்பந்தம் மூலம் ரேஷன் கார்டு பெற முயற்சிக்கின்றனர். முகவரி மாற்றம், பெயர் திருத்தம், கார்டு வகை மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு சிலருக்கு உடனடியாக தீர்வு கிடைக்கிறது. ஆனால், புதிய ரேஷன் கார்டு பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், பலர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உடனடியாக விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர்.
ரேஷன் கார்டு நிலையை தினமும் ஆன்லைனில் சரிபார்த்து, கார்டு கிடைத்தவுடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தயாராக இருக்கின்றனர். குறிப்பாக, புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் முதன்முதலில் விண்ணப்பிக்க விரும்பும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதான்.
இந்நிலையில், இதுவரை 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் புதியதாக விண்ணப்பித்துள்ளனர். நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்க நேரமிருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பித்தவர்களின் பட்டியல், தேர்வு செய்யப்பட்ட புதிய பயனாளிகள், அவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் பணவிடுவிப்பு தொடர்பான அறிவிப்பு தமிழக அரசால் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.




















