வேலைவாய்ப்பு
சமூக நல இயக்குநரகத்தில் வேலை!

சமூக நலத் துறை , மாநில அரசின் சத்துணவுத் திட்டத் கீழ் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள சமூக நல இயக்குநரகத்தில் காலியிடங்கள் 48 உள்ளது. இதில் சமூகநல அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: Welfare Officer
மொத்த காலியிடங்கள்: 48
மாத சம்பளம்: ரூ.20,000
வயது: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சமூகவியல், சமூக வேலை, உளவியல், மனை அறிவியலுடன் ஊட்டச்சத்து மற்றும் குழந்தை வளர்ச்சி போன்ற பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அஞ்சல் உறையின் மீது “Application for the Engagement of Welfare Officer on contract Basis”என்று குறிப்பிடவும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Social Welfare, Saradhambal Nagar, Ellaipillaichavady, Puducherry – 605 005.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.03.2020















