இந்தியா
ஜல்லிக்கட்டு 2026 – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

வரும் 2026ம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி தமிழகம் முழுதும் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அரசு செயலர் என்.சுப்பயைன் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அவற்றின் சாராம்சம் வருமாறு
- மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமலும் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது.
- விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு ,இணங்க இந்தப் போட்டிகளை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அ?னுமதி வழங்க வேண்டும்.
- இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் அவை துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
- இந்தப் போட்டிகள் நடத்துவதற்காக அதில் தொடர்புடைய துறைகள் அணைத்திலும் அதிகாரபூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- இதில் தொடர்புடைய அணைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்த வேண்டும்.
- போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அணைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
- போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அணைத்தும் இணைய வழியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போதே காப்பீட்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி விண்ணப்பதாரர்களை அறிவுறுத்த வேண்டும்.
- ஜல்லிக்கட்டுக்கு தொடர்பில்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கக்கூடாது.
- போட்டி களத்தில் இருந்து வெளியேறும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அளிக்க கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- போட்டி களத்துக்குள் வீரர்கள் அல்லாத பிறர் இருக்க அனுமதி கிடையாது. அதை உறுதி செய்வது காவல்துறை கடமையாகும்.
- பாதுகாப்பான முறையில் போட்டிகளை நடத்திட அணைவரும“் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







