கிரிக்கெட்
244 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 4வது கிரிக்கெட் போட்டி திங்கட்கிழமை மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
மேற்கு இந்திய தீவுகள் எதிரான மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி தக்க பதிலடியை கொடுத்துள்ளது.
2006-ம் ஆண்டுக்குப் பிறகு மும்பை பிராஃபோர்ன் மைதானத்தில் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட் போட்டியினை விளையாடியது. இது சிறு மைதானம் என்றதால் அதிகச் சிக்சர்களைக் காண நேர்ந்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 377 ரண்களைக் குவித்தது. ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 161 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடத் தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் 153 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பரிதாபமாகத் தோற்றுப்போனது.
















